புதிர்க்கேள்வி போட்டி 2025

புதிர் போட்டி 2025
வள்ளலார் சன்மார்க்க சங்கம், ஆசியா பெசிபிக் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க பல்கலைக்கழகம்( APU) இணைந்து இப்போட்டியை வழங்க உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பப்படும் மாணவர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த மாணவர்கள் மே மாதம் 3-ஆம் திகதி APU பல்கலைக்கழகத்தில் நேரடியாக பங்கேற்கலாம்.
இப்போட்டியில் பங்கு பெறவுள்ள மாணவர்கள் வலைதளத்தில் பதிவேற்றப்படும் காணொளியை கண்டு அக்கருத்துக்களை உள்வாங்கி மனனம் செய்து கொள்ள வேண்டும். போட்டி நிகழ்வன்று அக்கருத்துக்களை நினைவுகூர்ந்து புதிர் போட்டிகளுக்கு பதில் எழுத வேண்டும்.
இப் போட்டியில் கலந்து கொள்வதன் வழி மாணவர்கள் கேட்டல் திறனையும் மனனம் செய்யும் திறனையும் வகுத்துக் கொள்ள முடியும் மேலும் இப் போட்டியின் வழி மாணவர்கள் சுத்த சன்மார்க்க கோட்பாடுகளையும் வரலாறையும் இராமலிங்க அடிகளாரின் வரலாற்றையும் ஆழமாக புரிந்து கொள்ள முடியும்.
இராமலிங்க அடிகளார் வரலாறு பகுதி 1 | வள்ளலார் (22:30 நிமிடம்)
Youtube Link: https://www.youtube.com/watch?v=lB-cwi9f1B4
MP3 Recording:
வள்ளலார் பெருமான்: சித்தர் தனது உடலை ஒளியாக மாற்றினார்
சித்தர் கூட்டத்தில் இன்றைக்கு நாம் நினைக்க வேண்டியவர் மிகப்பெரிய சித்தர். அவருக்கு பெயர் இராமலிங்க வள்ளலார் பெருமான். வள்ளலார் என்றும், அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணைக்கு சொந்தக்காரர் என்றும் எல்லோராலும் போற்றப் படுபவர்.
வாழ்க்கை வரலாறு
வள்ளலார் பெருமான் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி, புரட்டாசி மாதம் 21-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பிறந்தார். அவருடைய அம்மா சின்னம்மையார், அப்பா ராமைய்யா பிள்ளை.
தென்னாடு சிவத்துக்கு உரியது என்பதால் இங்கு பிறந்த குழந்தை ராமலிங்கம் எனப் பெயரிடப்பட்டது. வடநாட்டில் ராமகிருஷ்ண பரமஹம்சர் 1836-ஆம் ஆண்டு பிறந்தார். இவ்விருவரும் மேலிருந்து இறங்கிய ஜோதி எனக் கூறப்படுகிறது.
சித்தர்களின் செயல்பாடுகள்
சித்தர்கள் மூன்று முக்கிய செயல்களைச் செய்கிறார்கள்:
- இரும்பை தங்கமாக மாற்றுதல்.
- உடலை தனித்தனியாக பிரித்து, திரும்ப சேர்த்தல் (நவகண்டம்).
- உடலை ஐந்து பூதங்களாக மாற்றி விடுதல்.
வள்ளலார் பெருமான் இதனை சாதித்து காட்டியவர். அவர் ஆன்மீக துறையில் மட்டுமல்ல, மருத்துவ அறிவிலும் சிறந்து விளங்கினார். மூலிகைகள் மூலம் நோய்களை குணப்படுத்தும் வழிமுறைகளை உலகிற்கு எடுத்துக் காட்டினார்.
அற்புத நிகழ்வுகள்
வள்ளலார் பெருமான் தங்கம் உருவாக்கும் சக்தியை வைத்திருந்தார். அவர் கைப்பிடித்த செங்கல், மண்ணு, இரும்பு தங்கமாக மாறியதைக் கண்டு மக்கள் அதிசயித்தனர். அவருடைய சீடர் ஒருவர் அவரது அறைக்குள் பார்த்த போது, உடல் பாகங்கள் தனித்தனியாக பிரிந்து கிடந்தன. ஆனால் சிறிது நேரத்தில் அவர் திரும்ப ஒட்டிக் கொண்டு வந்தார். இது நவகண்டம் என்று அழைக்கப்படுகிறது.
அவருடைய இறுதிக் காலத்தில் அறைக்குள் நுழைந்து, திருக்காப்பிட்டு கொண்டு உள்ளே முடிந்தார். பின்னர் அறை திறக்கப்பட்டபோது, உடலினால் கற்பூர வாசம் வீசியது. அவருடைய உடல் ஐந்து பூதங்களாக பிரிந்து விட்டது.
சிதம்பர ரகசியம்
வள்ளலார் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு குழந்தையாக சென்று, தீபாராதனையின் போது சிரித்தார். சிதம்பர ரகசியம் என்பது, சிவனுடைய தத்துவம் ஆகாசமாகவே இருப்பதை உணர்வது. இது சித்தர்களால் மட்டுமே உணர முடியும்.
அஞ்சு பூதங்களின் உருவம்:
- மண் - காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர்
- நீர் - திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்
- அக்னி - திருவண்ணாமலையில் அக்னி லிங்கம்
- காற்று - சிவலிங்கத்தின் முன் ஆடிக்கொண்டிருக்கும் தீபம்
- ஆகாசம் - சிதம்பரத்தில் காணப்படும் வெளிச்சம்
சித்தர்கள் இந்த ரகசியத்தை உணர்ந்தவர்கள். வள்ளலார் பெருமான் இதனை விளக்கி, ஆன்மீகப் பக்தியில் மக்களை ஈடுபடுத்தினார்.
மகா ஆன்மீக நாயகன்
வள்ளலார் பெருமான் பக்தியிலும், ஞானத்திலும் உயர்ந்தவர். அவர் உலகுக்கு அளித்த கல்வியும், கருணை போதனைகளும் மக்களுக்கு வழிகாட்டியாக விளங்குகின்றன. இதனால், அவர் இன்றும் ஒளியாய் வாழ்கிறார்.
இராமலிங்க அடிகளார் வரலாறு பகுதி 2 | வள்ளலார் (22:30 நிமிடம்)
Youtuib Link: https://www.youtube.com/watch?v=F2v92Za0090
MP3 Recording:
இராமலிங்க வள்ளல் பெருமானுடைய வாழ்க்கையை நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். மிகப்பெரிய சித்தரான வள்ளலார் 51 ஆண்டுகள் வாழ்ந்தவர். ஒன்பது வயதிலேயே கந்தகோட்டத்திலே போய் நின்று பாடினார்.
அவருடைய பாடல்கள் உலக நீதியின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டவை. "ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம். ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம். மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம். வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்" என்றபடி வாழ்வின் அர்த்தங்களை பாடல்களாகக் கூறினார்.
குழந்தைகளை நல்ல வழியில் வழிநடத்த பாடல்களை பாடி, அறநெறிகளை அறிவுறுத்தினார். "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று" போன்ற பாடல்கள் அவரது உன்னத எண்ணங்களை வெளிப்படுத்துகின்றன.
"உத்தமர்தம் உறவு வேண்டும், உன்னையே நினைக்க கூடிய உறவுகள் வேண்டும். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவாக கூடாது" என உண்மையான நட்பினைப் பற்றியும், "பெருமை வரும் நினது புகழ் பேசவேண்டும், பொய்மை பேசாதிருக்க வேண்டும்" என நேர்மையைப் பற்றியும் பாடினார்.
வள்ளலார் தனது சிறு வயதிலேயே கல்வியைத் தொடர்ந்து பயில விரும்பவில்லை. "இந்த படிப்பு சந்தைப் படிப்பு, நம் சொந்தப் படிப்பு அல்ல" என்று கூறி, ஆன்மிகத் தேடலை மேற்கொண்டார். இதனால், அவரது அண்ணன் சபாபதி பிள்ளை அவருக்கு உணவு கொடுக்க மறுத்து, வீட்டைவிட்டு வெளியேற்றினார்.
இராமலிங்கம் திருவொற்றியூர் கோயிலில் சென்று சிவபெருமானை வழிபட்டார். அங்கு "வடிவுடை மாணிக்கமாலை" பாடியபோது, அம்பாளே அவருக்கு உணவு அளித்ததாக ஒரு நிகழ்வு கூறப்படுகிறது. இது அவரது பக்தியின் உயர்வை காட்டுகிறது.
வள்ளலாரின் வாழ்க்கையில் பல திருப்புமுனைகள் வந்தன. சிறு வயதில் அனுபவித்த கஷ்டங்களையும், தன்னலம் இல்லாத சேவையையும் நாம் நினைவு கூற வேண்டும். அவரது அண்ணியார் பார்வதி, உணர்ச்சி மிக்க தருணத்தில், "இந்த பாவம் பிள்ளை எங்கே சாப்பிடுகிறான்?" என்று கண்கலங்கினார். இதனால், அவரது அண்ணன் மனமுருகி, வள்ளலாரை மீண்டும் வீட்டுக்கு வரச்சொல்லினார்.
வள்ளலார் உலகிற்கு விட்டுச்சென்ற அறிவுரைகள் இன்று பலரின் வாழ்வில் ஒளியாக விளங்குகின்றன. அவரது ஒளிவழி போதனைகள் அனைவருக்கும் இலட்சியமான வாழ்க்கையை நோக்கிச் செல்லும் ஒரு தீர்வாக அமைந்துள்ளன.
இந்த போட்டி தனிப்பட்ட முறையில் நடைபெறும், மேலும் பங்கேற்பாளர்கள் நான்கு வயது குழுக்களாகப் பிரிக்கப்படும்:
பிரிவி 2: வயது 7 முதல் 9
பிரிவி 3: வயது 10 முதல் 12
பிரிவி 4: வயது 13 முதல் 15
பிரிவி 5: 16 வயது மேல்
இப்போட்டி மே மாதம் 2025 மூன்றாம் திகதி அன்று நடைபெற உள்ளது. மாணவர்கள் வயது பிரிவுக்கேற்ப போட்டியில் பங்கு பெறலாம்.
ஒவ்வொரு பங்கேற்பாளரும் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட வகுப்பறையில் இருப்பார்கள். அவர்களின் பிரிவின்படி, அவர்களுக்கு பல்லுறை தேர்வுச் சீட்டுகள் மற்றும் ஒன்று அல்லது இரண்டு விவரிக்க வேண்டிய கேள்விகள் வழங்கப்படும். அனைத்து கேள்விகளுக்கும் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்.
நடுவர்கள் மாணவர்களின் மதிப்பெண்களை நிர்ணயம் செய்வார்கள். நடுவர்களின் தீர்ப்பே முடிவானது.
பங்கேற்க விரும்பும் மாணவர்கள், தயவுசெய்து வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பொத்தானை கிளிக் செய்து பதிவு செய்யவும். 2025 மார்ச் 28 முதல் பதிவு செய்யாத மாணவர்கள் போட்டி நாளில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டார்கள்.