Thirukkural Recital

Thirukural Competition 2025
Introduction to Thirukural
Thirukural, written by the great Tamil poet and philosopher Thiruvalluvar, is one of the most celebrated works of Tamil literature. It is a timeless masterpiece consisting of 1,330 couplets (Kurals), divided into 133 chapters across three main sections:
- Aram (Virtue): Focuses on ethical living and moral values.
- Porul (Wealth): Deals with governance, politics, and social responsibility.
- Inbam (Love): Explores the emotions and relationships of love and human connection.
Each couplet in Thirukural is concise, profound, and universally relevant, making it a guide for ethical and successful living. Known as the "Universal Code of Ethics," it transcends barriers of time, culture, and religion.
Why Thirukural for Children?
Thirukural's teachings are particularly valuable for young minds as they emphasize essential virtues such as:
- Honesty
- Kindness
- Compassion
- Discipline
- Responsibility
By introducing Thirukural to schoolchildren, we aim to inspire them to develop strong moral foundations and a deeper understanding of life. It serves as a bridge between tradition and modernity, guiding children to navigate challenges with wisdom and values.
Significance of the recital event:
This event provides students with an opportunity to explore these timeless couplets, understand their meanings, and articulate their relevance in today’s world. It not only enhances their knowledge of Tamil literature but also nurtures critical thinking and communication skills, preparing them to lead a value-driven life.
Let us celebrate this extraordinary work of wisdom and empower the next generation in Malaysia with the eternal values of Thirukural!
Event Details and Guidelines
The competition is divided into three categories. Students must thoroughly memorize the assigned Thirukural and clearly explain their meaning during the competition. Those who cannot read Tamil can convey the meaning in English or Malay language?
Categories and Kurals:
- Category 2: Ages 7 to 9 (8 Kurals)
- Category 3: Ages 10 to 12 (12 Kurals)
- Category 4: Ages 13 to 15 (15 Kurals)
Competition Date:
Students who pre-register through the official website can participate in the competition on Saturday, May 3, 2025, at Asia Pacific University of Technology and Innovation (APU).
Guidelines:
- On the day of the competition, students will be assigned a random Thirukural using a computer-based system. They must present the selected Thirukural and its explanation before the panel of judges.
- The explanation will be evaluated based on the students' understanding of virtue, knowledge, and their presentation skills.
We eagerly look forward to your participation!
1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (குறள்/ Kural 1)
(Agaram Mudhala Ezhuththellam Aathi
Bhagavan Mudhatre Ulagu)
தெளிவுரை 1:
எழுத்துக்கள் அனைத்தும் அகரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. அதுபோல் உலகம் இறைவனை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
தெளிவுரை 2:
'அ' என்ற எழுத்து எல்லா மொழிகளுக்கும் மூல ஓசையாக இருப்பது போல் இறைவன் எல்லா உயிர்களுக்கும் விளங்குகிறார்
Explanation 1:
Just as all letters are rooted in the letter "A," the world is rooted in the Supreme Being.
2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாரெனின் (குறள்/ Kural 2)
(Katrathanaal Aaya Payanenkol Vaalarivan
Natral Thozhaarenin)
தெளிவுரை 1:
தூய்மையான அறிவின் வடிவமாய் விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை வணங்காமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
தெளிவுரை 2:
ஒரு மாணவன் கடவுளின் திருவடிகளை வணங்கினால், அவன் கற்ற கல்வியின் பயனாக ஒழுக்கம் அவனைச் சாறும்.
Explanation 1:
What is the use of the knowledge one has acquired if one does not worship the sacred feet of the Supreme Being, the embodiment of pure wisdom?
3 நீர்இன்றி அமையாது உலகெனின் யாயார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கம் (குறள்/ Kural 20)
(Neer Indri Amaiyaathu Ulagenin
Yaayaarkkum Vaan Indri Amaiyaathu Ozhukkam)
தெளிவுரை 1:
எத்தகையோர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லாமல் உலகில் ஒழுக்கமும் நிலை பெறாது.
தெளிவுரை 2:
நீர், மழை இல்லை என்றால் எவ்வுயிரும் இவ்வுலகில் வாழ முடியாது. அதேபோல் மழை இல்லை எனினும் மனித வாழ்க்கையில் ஒழுக்கம் இல்லை என்று ஆகிவிடும்.
Explanation 1:
If it is true that life cannot exist without water, it is equally true that morality cannot prevail without rain.
4. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
எந்நோற்றான் கொல்எனும் சொல் (குறள்/ Kural 70)
(Makan Thandaikku Aatrum Udhavi Ivan Thandai
Ennotraan Kol Ennum Sol)
தெளிவுரை 1:
மகன் தன் தந்தைக்குச் செய்யும் உதவி என்னவெனறால், இவனை மகனாகப் பெற்றெடுப்பதற்கு இவர் என்ன தவம் செய்தாரோ எனப் பிறர் புகழ்ந்து உரைக்கும் சொல்லாகும்.
தெளிவுரை 2:
மகன் தந்தைக்கு செய்யும் கடமை " இவனின் தகப்பனார் இவனைப் பிள்ளையாக பெற என்ன தவம் செய்தாரோ" என்று மற்றவர்கள் புகழ்ந்து சொல்ல வைப்பதாகும்.
Explanation:
The help a son renders to his father is a reflection of the devotion and virtues the father displayed in raising him. It becomes a statement of praise for the father from others.
5. இனிய உளவாக இன்னாத கூறலும்
கனியிருப்பக் காய் கவர்ந் தற்று (குறள்/ Kural 100)
(Iniya Ulavaaga Innaatha Kooralum
Kani Iruppak Kaai Kavarntha Atrru)
தெளிவுரை 1:
இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பேசாமல் கடுமையான சொற்களைப் பேசுதல், கனி இருக்கும்போது கசப்பான காயைப் பறித்துத் தின்பதைப் போன்றதாகும்.
Explanation 1:
Speaking harsh words when sweet words are available is like picking a bitter fruit when a sweet one is present.
6 தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆராதே
நாவினாற் சுட்ட வடு (குறள்/ Kural 129)
(Theeyinaar Sutta Pun Ullaarum Aaraathe
Naavinaar Sutta Vadu)
தெளிவுரை 1:
தீயினால் உண்டாகும் புண் வெளியே வடுஇருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் கடுஞ்சொல் கூறிச் சுடும் வடு என்றுமே ஆறாது.
Explanation:
A wound caused by fire may heal from the outside, but a wound caused by harsh words will never heal.
7 அற்றார் அழிபசி தீர்த்தல்; அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி குறள்/ Kural 226)
(Attraar Azhihpasi Theerthal; Ahthoruvar
Petraan Porulvaippuzhi)
தெளிவுரை:
வறியவர்களின் கடுமையான பசியைப் போக்கவேண்டும்; அதுவே பொருள் பெற்ற ஒருவன், அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவும்படி சேர்த்து வைக்கும் இடமாகும்
Explanation:
Feeding the hungry and relieving their intense hunger is the true purpose of wealth. It serves as a treasure stored for one’s future benefit.
8 உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து (குறள்/ Kural 596)
(Ulluva Thellaam Uyarvullal Matrrathu
Thallinum Thallaamai Neerthu)
தெளிவுரை:
உள்ளத்தால் எண்ணுவதெல்லாம் உயர்வைப் பற்றியே எண்ண வேண்டும்; அவ்வுயர்வு ஏற்படாவிட்டாலும் அவ்வாறு உயர்வாக எண்ணுவதை விடக் கூடாது.
Explanation:
All thoughts should be focused on achieving greatness; even if greatness is not attained, it is better to aspire to greatness than to give up on it.
1 துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. (குறள்/ Kural 12)
(Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith
Thuppaarkkuth Thuppaaya Thoom Mazha.)
தெளிவுரை:
உண்பவர்க்கு உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதும், பருகுவார்க்குத் தானும் ஓர் உணவுப் பொருளாக இருப்பதும் மழையாகும்.
Explanation:
Rain not only provides the resources needed to produce food for those who eat, but it also serves as a vital source of sustenance in itself for those who drink.
2 ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் (குறள்/ Kural 69)
(Eendra Pozhudhin Periduvakkum Thanmaganai
Saantron Enakkeetta Thaai)
தெளிவுரை 1:
தன் மகனை சான்றோன் எனப் பிறர் கூறக் கேட்ட தாய், அவனை ஈன்ற நாளை விடப் பெரிதும் மகிழ்வாள்
தெளிவுரை 2:
ஒரு தாய், தனது மகனைச் சான்றோனாகக் கேட்கும் பொழுது தான் அவளது பெருமை உயர்கிறது.
Explanation:
A mother’s greatest joy is hearing others praise her son as a wise and virtuous person.
3 அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் (குறள்/ Kural 71)
(Anpirkkum Undo Adaikkum Thaal?
Aarvalar Punkaneer Poosal Tharum)
தெளிவுரை 1:
அன்புக்கும் அடைக்கும் தாழ்ப்பாள் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே அவருடைய அன்பைப் பலரும் அறிய வெளிப்படுத்தி விடும்.
தெளிவுரை 2:
தெளிவுரை 2:அன்பை அடைத்து வைப்பதற்கு பூட்டு உண்டோ? அன்புடைய உள்ளங்கள் சிறிதாவது கண்ணீர் வரச் செய்து அந்த உள்ளங்களை மற்றவர் அறிய வெளிப்படுத்தி விடும்
Explanation:
Can love ever be confined? Tears from a loving heart naturally reveal the depths of affection.
4 தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும். (குறள்/ Kural 114)
(Thakkar Thakavilar Enbathu Avaravar
Echaththaar Kaanappa Padum.)
தெளிவுரை:
நடுவு நிலைமையோடு வாழ்ந்தவர். நடுவு நிலைமை தவறி வாழ்ந்தவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் அறியப்படும்
Explanation:
Whether a person lived with fairness or failed to uphold neutrality will be judged by the reputation or blame they leave behind.
5 அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். (குறள்/ Kural 121)
(Adakkam Amararul Uykum Adangamai
Aarirul Uythu Vidum.)
தெளிவுரை:
ஒருவன் மேற்கொள்ளும் அடக்கம் அவனை உயர்த்தி, தேவருள் சேர்க்கும்; அடங்காமை கடுநரகில் சேர்த்து விடும்
Explanation:
Self-restraint elevates a person and leads them toward divine blessings, while lack of control plunges them into deep darkness.
6 யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. (குறள்/ Kural 127)
(Yaagaavaa Raayinum Naagaakka Kaavaakkaal
Sogaappar Sollizhukkup Pattu.)
தெளிவுரை:
ஒருவர் எவற்றைக் காக்காவிட்டாலும் நாவையாவது காக்க வேண்டும்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்பமடைவர்.
Explanation:
No matter who one is, they must guard their speech. Failure to do so will lead them to disgrace and sorrow caused by careless words.
7 ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். (குறள்/ Kural 131)
(Ozhukkam Vizhuppam Tharalaal Ozhukkam
Uyirinum Oombappadum.)
தெளிவுரை:
ஒழுக்கம்தான் எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதால் அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப் படும்
Explanation:
Morality bestows dignity and excellence upon everyone; therefore, morality is regarded and cherished as greater than life itself
8 உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். (குறள்/ Kural 140)
(Ulagathodu Otta Ozhugal Palakattrum
Kallaar Arivila Thaar.)
தெளிவுரை:
உலகத்தில் வாழும் உயர்ந்தவர்களோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நுல்களைக் கற்றிருந்தும் அறிவில்லாதவர்களே ஆவர்
Explanation:
Those who fail to learn the art of harmonious living with the wise, despite extensive education, are deemed ignorant.
9 கொள்ளான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும். (குறள்/ Kural 260)
(Kollaan Pulalai Maruththaanai Kaikoopi
Ellaa Uyirum Thozhum.)
தெளிவுரை 1:
எந்த உயிரையும் கொல்லாமல், புலால் உண்ணாமல் இருப்பவனை எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
தெளிவுரை 2:
ஒரு உயிரையும் கொள்ளாதவனையும் புலாலை உண்ணாதவனையும் எல்லா உயிரும் கைகூப்பி தொழும்
Explanation:
One who refrains from killing and abstains from eating meat will be revered by all living beings.
10 என்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு (குறள்/ Kural 392)
(Ennenpa Enaai Ezhuththenpa Ivvirandum
Kanenpa Vaalum Uyirkku)
தெளிவுரை 1:
என் மற்றும் எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இருவகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
தெளிவுரை 2:
எண் என்று சொல்லப்படுவனவும், எழுத்து என்று சொல்லப்படுவதுமாகிய இரண்டினையும் மக்களுக்கு இரு கண்கள் போன்றது என்பர் கற்றறிந்த பெரியோர்கள்
Explanation:
The two forms of knowledge — 'En' (number) and 'Ezuththu' (letters) — are both referred to as the "eyes" for all living beings, indicating how essential these forms of understanding are for life.
11 எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. (குறள்/ Kural 467)
(Ennith Thuniga Karumam Thuninthapin
Ennuvam Enbadhu Izhuppu.)
தெளிவுரை 1:
நன்கு சிந்தித்து ஒரு செயலில் இறங்க வேண்டும். செயலில் இறங்கிய பின்பு சிந்திப்பது குற்றமாகும்.
தெளிவுரை 2:
எண் என்று சொல்லப்படுவனவும், எழுத்து என்று சொல்லப்படுவதுமாகிய இரண்டினையும் மக்களுக்கு இரு கண்கள் போன்றது என்பர் கற்றறிந்த பெரியோர்கள்
Explanation:
Think thoroughly before undertaking any action. It is a fault to reconsider once the action has begun.
12 முகம்நக நட்பது நட்பன்று-நெஞ்சத்து
அகம்நக நட்பது நட்பு (குறள்/ Kural 786)
(Mukamnaaga Natpadu Natpandru
Nenchatthu Agamnaaga Natpadu Natpu)
தெளிவுரை 1:
முகத்தளவில் சிரித்துப் பேசுவது நட்பன்று; அகம் மலரும்படி நட்பு செய்வதே நட்பாகும்.
தெளிவுரை 2:
முகத் தில் மலர்ச்சி காட்டி நட்பு செய்வது மட்டும் நட்பாகாது; இருவரது மனங்களும் உள்ளுக்குள் மகிழும் படியாக பழகிக் கொள்வதே நட்பாகும்.
Explanation:
Friendship is not merely smiling outwardly; true friendship is one that brings joy to the heart.
1 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (குறள்/ Kural 5)
(Irulser Iruvinaiyum Sera Iraivan
Porulser Pugazhp Urindhaar Maatru)
தெளிவுரை:
இறைவனின் உண்மையான புகழை விரும்பி, அவரிடம் அன்பு செழுத்துகின்றவரிடம் அறியாமையால் ஏற்படும் நல்வினை, தீவினை இல்லை.
Explanation:
For those who desire the true glory of the Supreme Being and love Him with sincerity, any good deeds that occur out of ignorance will not result in any harm.
2 செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (குறள்/ Kural 26)
(Seyarkariya Seyvar Periyar Siriyar
Seyarkariya Seykalaa Thaar)
தெளிவுரை:
செய்வதற்கு அரிய செயல்களைச் செய்ய வல்லமை பெற்றவர்களே பெரியோர் ஆவர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்ய இயலாதவர்கள் சிறியோர் ஆவர்.
Explanation:
Those who have the ability to perform rare and significant actions are considered great. Those who lack the ability to perform such actions are considered lesser.
3 அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். (குறள்/ Kural 35)
(Azhukkaaru Avaavekuli Innaachchol Naangum
Izhukkaa Iyanrathu Aram)
தெளிவுரை:
பொறாமை, எப்பொருளின் மேலும் பற்றுக் கொள்ளும் பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடம் கொடுக்காமல் அவற்றை வெறுத்து ஒழுகுவதே அறமாகும்.
Explanation:
Righteousness is avoiding four faults: jealousy, greed for more, anger, and harsh speech. One should refrain from these vices and live with integrity.
4 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். (குறள்/ Kural 50)
(Vaiyathul Vaazvaangu Vaazhbavan Vaanurayum
Dhaivathul Vaikkap Padum)
தெளிவுரை:
இவ்வுலகில் வாழ வேண்டிய அறநெறிப்படி வாழ்பவன் வானுலகில் உள்ள தேவர்களுடன் ஒப்பவைத்து மதிக்கப்படுவான்.
Explanation:
One who lives in accordance with the righteous path in this world will be honored and revered, compared to the gods in the heavenly realm.
5 தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். (குறள்/ Kural 67)
(Thandai Magarkaattum Nanri Avaiyathu
Mundhi Irupach Seyhal)
தெளிவுரை:
கற்றோர் கூடிஇருக்கும் அவையில் முதன்மையாக விளங்கச் செய்தலே ஒரு தந்தை தன் மகனுக்கு செய்யும் நல்ல உதவியாகும்.
Explanation:
The best help a father can offer his son is to make him shine as a leader in a community of learned individuals.
6 இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. (குறள்/ Kural 100)
(Iniya Ulavaaga Innaadha Kooral
Kaniruppak Kaaykavarnthattru)
தெளிவுரை:
இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பேசாமல் கடுமையான சொற்களைப் பேசுதல், கனி இருக்கும்போது கசப்பான காயைப் பறித்துத் தின்பதைப் போன்றதாகும்.
Explanation:
Speaking harsh words when sweet words are available is like picking a bitter fruit when a sweet one is present.
7 உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து. (குறள்/ Kural 105)
(Udhavi Varaitthanru Udhavi Udhavi
Seyappattaar Saalbin Varaitthu)
தெளிவுரை:
ஒருவர் நமக்கு முன்பு உதவி செய்திருக்க, அதற்கு கைம்மாறாக நாம் அவருக்குச் செய்யும் உதவிக்கு அளவில்லை. அது அவருடைய பண்புக்கு ஏற்ற அளவை உடையது.
Explanation:
When someone has helped us before, the help we offer them in return should not be measured in exact terms, but rather according to their character and worth.
8 எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (குறள்/ Kural 110)
(Ennanri Konraarkkum Uyvunthaama Uyvillai
Seynanri Konra Magarku)
தெளிவுரை:
எந்த அறத்தை அழித்தவர்க்கும் அதிலிருந்து தப்பிப்பிழைக்க வழி உண்டு, ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்கு அதிலிருந்து தப்பிப் பிழைக்க வழியே இல்லை.
Explanation:
Anyone who destroys righteousness can still find a way to escape the consequences, but one who forgets the help given to them will never escape the consequences.
9 ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து. (குறள்/ Kural 126)
(Orumaiyul Aamaipol Aindadakkal Aatrin
Ezhumaiyum Emaap Pudaitthu)
தெளிவுரை:
ஆமைபோல் ஒருவர் ஐம்பொறிகளையும் ஒரு பிறப்பில் அடக்கி ஆள்பவராக இருந்தால், அஃது ஒருவர்க்கு ஏழு பிறப்பிலும் வந்து சிறப்பளிக்கும்.
Explanation:
If a person controls the five senses like a turtle in this life, this self-restraint will bring them glory in all future lives as well.
10 தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. (குறள்/ Kural 129)
(Theeyinaar suttapun ullaaarum aaraadhae
Naavinaar sutta vadu.)
தெளிவுரை:
தீயினால் உண்டாகும் புண் வெளியே வடுஇருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் கடுஞ்சொல் கூறிச் சுடும் வடு என்றுமே ஆறாது.
Explanation:
The wounds caused by fire may heal over time, but the scars left by harsh words spoken by the tongue will never fade.
11 அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (குறள்/ Kural 151)
(Akazhvaarai Thangum Nilampolath Thamai
Izhazhvaarp Poruththal Thalai)
தெளிவுரை:
தன்னைத் தோண்டுபவரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல, தம்மை இகழ்பவரையும் பொறுத்துக்கொள்வதே தலை சிறந்த பண்பாகும்.
Explanation:
Enduring the insults from those who scorn us is like the earth bearing the burdens placed upon it, a sign of noble character and patience.
12 சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். (குறள்/ Kural 200)
(Solluga Sollir Payanudaiya Sollarkka
Sollir Payanilaach Chol)
தெளிவுரை:
சொற்களில் பயனுடைய சொற்களை மட்டுமே சொல்ல வேண்டும், பயனற்ற சொற்களைச் சொல்லக் கூடாது.
Explanation:
One should speak only words that are beneficial and useful, and avoid speaking words that serve no purpose.
13 அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (குறள்/ Kural 226)
(Attrar Azhipasi Theerthal Athoruvan
Petran Porulvaip Puzhi)
தெளிவுரை:
வறியவர்களின் கடுமையான பசியைப் போக்கவேண்டும்; அதுவே பொருள் பெற்ற ஒருவன், அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவும்படி சேர்த்து வைக்கும் இடமாகும்.
Explanation:
The act of alleviating the severe hunger of the poor becomes the means by which a person who has acquired wealth ensures that this wealth will be a source of future aid to them.
14 ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு. (குறள்/ Kural 231)
(Eedhal Isai Pad Vaazhdhal Adhavalladhu
Oothiyam Illai Uyirkku)
தெளிவுரை:
வறியவர்க்குக் கொடுக்க வேண்டும். அதனால் புகழ் உண்டாகும்படி வாழ வேண்டும். அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.
Explanation:
One should give to the poor and live in such a way that they earn praise. Without this praise, there is nothing else that can be considered true sustenance for life.
15 அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. (குறள்/ Kural 247)
(Arulillaar kku Avvulagam Illai Porulillaar kku
Ivvulagam Illaaki Yaangu)
தெளிவுரை:
அருள் இல்லாதவர்க்குத் தேவருலகம் இல்லை, பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை.
Explanation:
For those without grace, there is no heavenly world, and for those without wealth, this world holds no value.
Those interested in participating should visit the homepage and click the Registration button to sign up. Students who are not registered will not be accepted on the day of the competition.