
திருஅருட்பா விழா 2025
வள்ளலார் அருட்பா பாடல் மற்றும் அறிவியல் பகிர்வு விழா 2025க்கு வரவேற்கின்றோம்
கருணை, ஆன்மிகம் மற்றும் உலக சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ஆழ்ந்த போதனைகளுக்காக போற்றப்படும் வள்ளலார் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்த சிறப்பு நிகழ்விற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
மலேசியா வள்ளலார் சன்மார்க்க சங்கம், கடந்த நான்கு ஆண்டுகளாக (2021-2024) இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வந்தது. ஐந்தாவது ஆண்டில், இதைப் பொலிவூட்டவும், மகிழ்வூட்டும் உயர்நிலைத் தரத்தில் கொண்டாடவும், ஆசியா பசிபிக் பல்கலைக்கழகம் (Asia Pacific University of Technology & Innovation, APU) உடன் இணைந்து நடத்த உள்ளோம். இவ்விழாவின் வெற்றிக்காக பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் குழுவின் ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் அமையவுள்ளது.
இம்முறை நிகழ்வில், வள்ளலாரின் போதனைகளின் பேரறிவையும், அவரது அன்பு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், பின்வரும் போட்டிகள் நடைபெறுகின்றன:
- திருஅருட்பா (Poem)
- மேடை பேச்சு (Speech)
- ஓவியப் & இயங்குபடம் (Animation)
- அருட்பா புதிர்க்கேள்வி (Quiz)
- திருக்குறள் (ThirukKural)
ஐந்து (5) போட்டிகளில் முதல் மூன்று (அருட்பா, பேச்சு, மற்றும் அனிமேஷன்) போட்டிக்கான தகவல்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். மீதமுள்ள ஓவியம் (நிறமிடுதல், முக வரைதல்) குரல், புதிர்க்கேள்வி போட்டிகள் ஆசியா பெசிபிக் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க பல்கலைக்கழகத்தில் ( APU) நேரடியாக கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு போட்டியின் விதிமுறைகளை கவனமாகப் வாசிக்கவும்.
முக்கிய தேதிகள்:
- 1 பிப்ரவரி 2024: மாணவர்கள் பயிற்சிக்கு இணையதளம் தயாராக இருக்கும்.
- 7 மார்ச் 2025 முதல் 28 மார்ச் 2025 வரை: தகவல்களை பதிவேற்றக் கூடிய கால அளவு.
- 15 ஏப்ரல் 2025 முதல் 24 ஏப்ரல் 2025 வரை: தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் அறிவிக்கப்படும்.
- 3 மே 2025: இறுதி போட்டிகள் ஆசியா பசிபிக் பல்கலைக்கழகத்தில் (APU) நடைபெறும்.
இந்த நிகழ்வு, வள்ளலாரின் நேர்த்தியான அறிவுக்கருத்துகளை இசை மற்றும் அறிவியல் வாயிலாக முன்னெடுத்து, அனைவருக்கும் ஆன்மிகத் திறன்களை வளர்க்கும் ஒரு அரிய வாய்ப்பாக அமையும்.
இந்த நிகழ்வில் தமிழ், மலாய் மற்றும் சர்வதேச பள்ளி மாணவர்கள் பங்கேற்க இருப்பதால், இணையப் பக்கம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் வாசிக்க தெரியாத மாணவர்கள் ஆங்கில பதிப்பில் உள்ள ரோமானியப்படமாக்கல்களை (Romanized English)ப் பயன்படுத்தி பின்பற்றலாம்.
இந்த மேம்பட்ட நிகழ்வை மலேசியா வள்ளலார் சன்மார்க்க சங்கம் மற்றும் கீழே காணப்படும் பாராட்டத்தக்க அமைப்புகளின் இணைப்பில் நடத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்:
- பேர்துபோஹன் கெபஜிகான் சினார் நாடி (Pertubuhan Kebajikan Sinar Nadi)
- ஆசியா பெசிபிக் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க பல்கலைக்கழகம் Asia Pacific University of Technology & Innovation ( APU)
இந்த உயர்தர விழாவில் உங்களின் ஆர்வமிகு பங்கேற்பை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்!

மின் சான்றிதழ் (E-Certificate):
பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் மின் சான்றிதழ் (e-Certificate) மின்னஞ்சல் அல்லது வாட்ஸாப்ப் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
இந்த நிகழ்வு உங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பு என்பதால், நீங்கள் இதை முழுமையாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்!
இந்த மகத்தான விழாவில் உங்கள் உற்சாகமான பங்கேற்பைப் பெரும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்!
வரவிருக்கும் நிகழ்வுகள்

அருட்பா
பங்கு பெறும் அனைத்து மாணவர்களும் மூன்று அருட்பா பாடல்களை மனனம் செய்ய வேண்டும். பிரிவு 1, 2, 3 க்கு மனனம் மட்டும் போதுமானது, விளக்கம் தேவை இல்லை. ஆனால் பிரிவு 4 மற்றும் 5 இல் உள்ள மாணவர்கள் மூன்று பாடல்களையும் மனனம் மற்றும் விளக்கங்களை சொல்ல வேண்டும். உங்கள் காணொளியை பதிவேற்றுவதற்கான காலம் 7 மார்ச் 2025 முதல் 24 மார்ச் 2025.

மேடை பேச்சு
பிரிவு 2: வயது7-9 (2.5 முதல் 3 நிமிடங்கள்)
பிரிவு 3: வயது 10-12 (3.5 முதல் 4 நிமிடங்கள்)
பிரிவு 4: வயது 13-15 (4.5 முதல் 5 நிமிடங்கள்)
பிரிவு 5: வயது 16+ (5 முதல் 6 நிமிடங்கள்)
பங்கு பெறுவோர் சன்மார்க்க கொள்கைகளின் அடிப்படையில் ஒரு காணொளி பேச்சை சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் காணொளியை பதிவேற்றுவதற்கான காலம் 7 மார்ச் 2025 முதல் 24 மார்ச் 2025.

ஓவியப் & இயங்குபடம்
வண்ணம், பென்சில் கலை மற்றும் அனிமேஷன் போட்டி
பிரிவு 1: தனிநபர், 6 வயதுக்கு கீழ் (வண்ணம்) – இடம்: APU
பிரிவு 2: தனிநபர், 7 முதல் 9 வயது (பென்சில் கலை) – இடம்: APU
பிரிவுகள் 3, 4, 5: ஒரு குழுவில் 2 பேர்: 10 முதல் 12 வயது, 13 முதல் 15 வயது, மற்றும் 17 வயதுக்கு மேல் (கம்ப்யூட்டர் அனிமேஷன்) – கால அளவு: 2.5 முதல் 3.5 நிமிடங்கள்.

திருக்குறள்
பிரிவு 2: வயது 7 முதல் 9 (8 குறள்கள்)
பிரிவு 3: வயது 10 முதல் 12 (12 குறள்கள்)
பிரிவு 4: வயது 13 முதல் 15 (15 குறள்கள்)
இணையதளம் மூலம் முன்பதிவு செய்த மாணவர்கள் 3 மே 2025, சனிக்கிழமை, ஆசிய பசிபிக் பல்கலைக்கழகம் (APU)-இல் நடைபெறும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.

அருட்பா புதிர்க்கேள்வி
இந்த போட்டி தனிநபர் முறையில் நடைபெறும். இதில் நான்கு பிரிவுகள் உள்ளன.
பிரிவு 2: வயது 7 முதல் 9 வயது
பிரிவு 3: வயது 10 முதல் 12 வயது
பிரிவு 4: வயது 13 முதல் 15 வயது
பிரிவு 5: வயது16 மற்றும் அதற்கு மேல்
இணையதளம் மூலம் முன்பதிவு செய்த மாணவர்கள் 3 மே 2025, சனிக்கிழமை, ஆசிய பசிபிக் பல்கலைக்கழகம் (APU)-இல் நடைபெறும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.