சன்மார்க்கப் பேச்சுப் போட்டி 2025

சன்மார்க்கப் பேச்சுப்போட்டி 2025.
வள்ளலார் சன்மார்க்க சங்கம், ஆசியா பெசிபிக் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க பல்கலைக்கழகம்( APU) இணைந்து இப்போட்டியை வழங்க உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பப்படும் மாணவர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். பிறகு மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட பேச்சு காணொளியை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
நடுவர்கள் சிறந்த பேச்சு காணொளியை தேர்வு செய்து முடிவுகளை வலைத்தளத்தில் தெரிவிப்பார்கள். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் மே மாதம் 3-ஆம் திகதி APU பல்கலைக்கழகத்தில் நேரடியாக பங்கேற்கலாம்.
இப்போட்டியில் பங்குகொள்வதன் வழி மாணவர்கள் பேச்சு திறனையும் தன்னம்பிக்கையும் வளர்த்துக் கொள்ளலாம். அவர்கள் தைரியமாக கருத்துக்களை முன் வைக்கும் ஆற்றலையும் பெறலாம். மேலும் இப் போட்டியின் வழி மாணவர்கள் சுத்த சன்மார்க்க கோட்பாடுகளை ஆழமாக புரிந்து கொள்ள முடியும்.
போட்டியானது வயது அடிப்படையில் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் ஒவ்வொரு குழுவிற்கும் குறிப்பிட்ட நேர வரம்பு வழங்கப்பட்டுள்ளது:
- பிரிவு 2: வயது 7 முதல் 9 (2.5 முதல் 3 நிமிடங்கள்)
- பிரிவு 3: வயது 10 முதல் 12 (3.5 முதல் 4 நிமிடங்கள்)
- பிரிவு 4: வயது 13 முதல் 15 (4.5 முதல் 5 நிமிடங்கள்)
- பிரிவு 5: வயது 16 மற்றும் அதற்கும் மேல் (5.5 முதல் 6 நிமிடங்கள்)
மாணவர்கள் தங்களுக்கான பிரிவின் நேர வரம்பு கேட்ப பேச்சை தயார் செய்து காணொளியை பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்கள் கீழ்காணப்படும் தலைப்புகளின் ஒன்றினை தேர்வு செய்து அவர்களின் படைப்புகளை செய்ய வேண்டும்.
1. அன்பு
2. எல்லா உயிர்களும் நம் சகோதரர்களே
3. இன்சொல்லாடல்
4. கடவுள் ஒருவரே
5. உயிர்களுக்கு தொண்டு செய்வதே கடவுள் வழிபாடு
6. சமத்துவம்
7. அகத்தூய்மை, புறத்தூய்மையின் முக்கியத்துவம்
8. குறிப்பிட்ட ஓர் அருட்பா பாடலை விளக்குக.
நடுவர்கள் சிறந்த பேச்சு காணொளியை தேர்வு செய்து முடிவுகளை வலைத்தளத்தில் தெரிவிப்பார்கள். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் மே மாதம் 3-ஆம் திகதி APU பல்கலைக்கழகத்தில் நேரடியாக பங்கேற்கலாம்.